Enable Javscript for better performance
ஆடை வடிவமைத்தல் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆடை வடிவமைத்தல் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

    By நாமக்கல்  |   Published on : 22nd January 2015 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், அளிக்கப்படவுள்ள ஆடை வடிவமைத்தல் இலவசப் பயிற்சிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அந்த நிறுவனத்தின் இயக்குநர் ஈ.ராஜு தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    இந்தப் பயிற்சியில் சேர்வதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 21 வயதுக்கு மேல் 45 வயதுக்கு உள்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி செலவு, பயிற்சி பொருள்கள், உணவு இலவசமாக வழங்கப்படும். வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் இந்தப் பயிற்சி, 21 முழுவேலை நாள்கள் நடைபெறும்.

    இந்தப் பயிற்சியில் பஞ்சாபி, பட்டியாலா, அரபிக், ராஜஸ்தானி, நவீன மாடல் சுடிதார்கள் குறித்து விளக்கம், செயல் முறைப் பயிற்சி அளிக்கப்படும். இதுபோல, சேலை பிளவுஸ், சாதாரண பிளவுஸ், கிராஸ் பட்டி, செமி கோரி, டபுள் கோரி, கிராஸ் கட்டிங், ஹை நெக், பேக் பட்டன் பிளவுஸ், பேன்ஸி பிளவுஸ் வகைகளும், பள்ளி மாணவர் சீருடை, பெட்டி கோட், நைட்டீஸ் தையல் குறித்து செயல்முறை பயிற்சியும் அளிக்கப்படும். தையல் கலைஞர்களுக்கு பொதுமக்களிடையே அதிக தேவையும், வரவேற்பும் உள்ளதால் ஆர்வமுள்ள தொழில் முனைவோர் வரும் 28-ஆம் தேதிக்குள் நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai