Enable Javscript for better performance
இலவச மருத்துவ பரிசோதனை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    26-ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நடந்த, இந்த முகாமை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கே.எஸ்.துரைசாமி தொடக்கிவைத்தார்.

    ஓட்டுநர் உரிமம், பழகுநர் உரிமம், உரிமம் புதுப்பிக்க வந்தவர்கள் மற்றும் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு ரத்த அழுத்தம், கண் பரிசோதனை, உடல் பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தம் 300 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. 4 பேருக்கு இருதய நோய், 51 பேருக்கு ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டு மேல்சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டனர்.

    மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தாமோதரன், சண்முகானந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai