Enable Javscript for better performance
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    குமாரபாளையம் அருகே இளம்பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

    குமாரபாளையம் அருகே, தட்டங்குட்டை மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் மோகன்குமார். இவரது மனைவி ரேவதி (34). இந்தத் தம்பதியினரின் மகள் பத்மாவதி, மகன் இன்பரசன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மோகன்குமார் காலமானார். இதையடுத்து, ரேவதி தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து தகவலறிந்த குமாரபாளையம் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். உதவி ஆய்வாளர் அன்பழகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai