சுடச்சுட

    

    இளைஞர் கொலை வழக்கு: மூவரிடம் போலீஸார் விசாரணை

    By குமாரபாளையம்,  |   Published on : 22nd January 2015 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமாரபாளையம் அருகே மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் உள்பட மூவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குமாரபாளையம் வட்டமலையைச் சேர்ந்த நாராயணன் மகன் சந்திரன் (34). பழநிக்கு பாதயாத்திரையாகச் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை குமாரபாளையம் திரும்பினார். இவர், ஆனங்கூர் பிரிவு அருகே உள்ள டாஸ்மாக் மதுக் கடைக்கு மது அருந்தச் சென்றாராம். அப்போது, அங்கு சந்திரனுக்கும், அருகே மது அருந்திய சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.

    இதில் ஆத்திரமடைந்த மூவர், சந்திரனைக் கட்டையால் தாக்கிவிட்டு தப்பி ஓடினராம். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்து சென்ற குமாரபாளையம் போலீஸார், சந்திரனை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து குமாரபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் சண்முகம், ராம்குமார் மற்றும் வேணுகோபால் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai