சுடச்சுட

    

    குடிநீர் விநியோகத்தில் முறைகேடு:நகராட்சி ஊழியர் பணியிடை நீக்கம்

    By நாமக்கல்  |   Published on : 22nd January 2015 04:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடிநீர் விநியோகத்தில் முறைகேடு செய்த நகராட்சி ஊழியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

    நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட தும்மங்குறிச்சி பகுதி மக்கள் போதிய குடிநீர் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டதன் பேரில், ஆட்சியர் உத்தரவின்படி, அந்தப் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக நாமக்கல் நகராட்சி குடிநீர் விநியோகிக்கும் லாரி செவ்வாய்க்கிழமை சென்றுள்ளது.

    அந்த லாரியை தும்மங்குறிச்சி மேல்நிலைத் தொட்டி இயக்குபவராகப் பணிபுரிந்து வரும் ஆர்.முருகேசன் என்பவர் தும்மங்குறிச்சியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்ட குடிநீரை, முறைகேடாக தனது வீட்டிற்கு அந்தக் குடிநீர் லாரியைத் திருப்பி எடுத்துச் சென்று வீட்டிலுள்ள மேல்நிலைத்தொட்டியில் தண்ணீரை நிரப்பி உள்ளார்.

    இதை அறிந்த அந்தப் பகுதி மக்கள் அந்தக் குடிநீர் லாரியை வழிமறித்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து, அங்கு நகராட்சி அதிகாரிகள் சென்று லாரியை மீட்டனர்.

    இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிரன்படி, குடிநீர் வாகனத்தை தவறாகப் பயன்படுத்திய தும்மங்குறிச்சி மேல்நிலைத் தொட்டி இயக்குபவராகப் பணிபுரிந்து வந்த ஆர்.முருகேசனை ஆட்சியர் உத்தரவின்படி, பணியிடை நீக்கம் செய்தும், லாரி ஓட்டுநர் எம்.செந்தில்குமாரை பணியிட மாற்றம் செய்தும் நகராட்சி ஆணையர் புதன்கிழமை உத்தரவிட்டார்.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி கூறியது:

    குடிநீரை முறையாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யாமல் அதை தவறாகப் பயன்படுத்துவோர் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் எவ்வித பாகுபாடு இல்லாமல் அனைத்துப் பகுதிகளுக்கும் சமமாக விநியோகம் செய்ய வேண்டும்.

    குடிநீரை பொதுமக்களும் வீணாக்காமல் தங்களின் தேவைக்கேற்ப சிக்கனமாக பயன்படுத்தி, சேமிக்க முன்வர வேண்டும். மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் பணியை மேற்கொண்டுள்ள அலுவலர்கள் தவறு செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai