Enable Javscript for better performance
குமாரபாளையம் தொழிலாளி கொலை வழக்கு: இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    குமாரபாளையம் தொழிலாளி கொலை வழக்கு: இருவர் கைது

    By குமாரபாளையம்,  |   Published on : 22nd January 2015 04:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமாரபாளையம் அருகே கட்டடத் தொழிலாளி கட்டையால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில்,

    இருவரை போலீஸார் கைது செய்தனர்.

    ஈரோடு அருகே, பெருந்துறை ஊத்துக்காட்டைச் சேர்ந்தவர் நல்லகுமார் (24). இவர், குமாரபாளையம் அருகே வட்டமலையில் குடும்பத்துடன் தங்கி கட்டடப் பணிக்குச் சென்று வந்தார். இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி, இவரது மனைவி லட்சுமியின் உறவினர்கள் மணிவண்ணன், திருமுருகன் ஆகியோருடன் வாய்த் தகராறு ஏற்பட்டதாம்.

    இதில், ஆத்திரமடைந்த இருவரும் கட்டையால் நல்லகுமாரைத் தாக்கினராம். இதில், தலையில் பலத்த காயமடைந்த நல்லக்குமார், ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு புதன்கிழமை உயிரிழந்தார்.

    இதையடுத்து, குமாரபாளையம் போலீஸார், அடிதடி வழக்காகப் பதிவு செய்த இந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி, உறவினர்கள் மணிவண்ணன், திருமுருகன் ஆகியோரை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai