சுடச்சுட

    

    ராசிபுரம் நகராட்சி சார்பில், 26-ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வுப் பேரணி நகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

    நகர்மன்றத் தலைவர் எம்.பாலசுப்ரமணியம் தலைமை வகித்து பேரணியை தொடக்கிவைத்தார். ராசிபுரம் போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் சுப்பிரமணி வரவேற்றார். நகராட்சி ஆணையர் சந்திரசேகர், சுகாதாரத் துறை அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகராட்சி அலுவலகம் முன் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் அலுவலகத்தை வந்தடைந்தது.

    பேரணியில், சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட எடைக்கு மேல் சுமை ஏற்றக்கூடாது. தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தை இடதுபுறமாக மட்டுமே ஓட்டிச் செல்ல வேண்டும். சிக்னல் விளக்கு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்திச் சென்றனர்.

    இதில், ராசிபுரம் நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.வெங்கடாசலம், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வதீபா, நகராட்சி தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai