சுடச்சுட

    

    ஜன.27-இல் வெள்ளாட்டுக் குட்டி இறப்பைத் தடுத்தல் பயிற்சி

    By நாமக்கல்  |   Published on : 22nd January 2015 04:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெள்ளாடு வளர்ப்பில் குட்டிகள் இறப்பைத் தடுத்தல், நோய் வராமல் பாதுகாத்தல் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வெள்ளாட்டுக் குட்டிகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்கள், அதன் தாக்கம் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விளக்கப்படும். மேலும், நோய்த் தாக்கம் ஏற்படும் கால அட்டவணைக்கேற்ப தடுப்பூசி அளிக்கும் முறைகள் குறித்தும் பயிற்சியில் விளக்கம் அளிக்கப்படும்.

    இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம்.

    விருப்பமுள்ளவர்கள் நாமக்கல்-மோகனூர் சாலையில், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது 04286-266345, 266244, 266650 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ 26-ஆம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai