சுடச்சுட

  

  ஜன.25-ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய வாக்காளர்கள் தினத்தை முன்னிட்டு, வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

  பேரணியை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.தட்சிணாமூர்த்தி கொடியசைத்து தொடக்கிவைத்தார். பேரணி நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி, மோகனூர் சாலை, பேருந்து நிலையம், திருச்சி சாலை, ஸ்டேட் வங்கி, பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள் வழியாக மீண்டும் மோகனூர் சாலையை வந்தடைந்து. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

  பேரணியில், வருவாய்க் கோட்டாட்சியர் காளிமுத்து, துணை ஆட்சியர் எஸ்.சூரியபிரகாஷ், நாமக்கல் நகராட்சி ஆணையர் அசோக்குமார், வட்டாட்சியர் கதிரேசன், தேர்தல் வட்டாட்சியர் சுகுமார், துணை வட்டாட்சியர் விஜயராணி, தேர்தல் விழிப்புணர்வு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.ஆர்.ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai