சுடச்சுட

    

    நாககன்னி அம்மன் கோயிலில் நாளை ஆஞ்சநேயர் யாகம்

    By ராசிபுரம்,  |   Published on : 22nd January 2015 04:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் அருகே அரியாகவுண்டம்பட்டி ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ நாககன்னி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜன.23) மஹா மாருதி ஆஞ்சநேய யாக விழா நடைபெற உள்ளது.

    நாமகிரிப்பேட்டை அருகே, அரியாகவுண்டப்பட்டியில் கொங்கலம்மன் கோயில் பகுதியில் ஸ்ரீ கருப்பசாமி, நாககன்னி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், கொங்காலம்மன், சப்த கன்னியர்கள், மகிஷாசுரமர்த்தினி சன்னதிகள் உள்ளன. கோயிலில், வாகன ஓட்டுநர்களுக்கு சாலை விபத்துகள் நிகழாமல் பாதுகாக்கவும், அவர்களது குடும்பம் செழிக்கவும் இந்த யாகம் நடத்தப்படுகிறது. வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் இந்த யாகம் நடைபெற உள்ளது.

    தொடர்ந்து, மஹா சுதர்ஷன யாகம், மாருதி ஆஞ்சநேயர் யாகமும் நடைபெற உள்ளது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai