சுடச்சுட

  

  பரமத்தி அருகே குழந்தைக்கு டெங்கு அறிகுறி: மருத்துவக் குழுவினர் நோய் தடுப்பு நடவடிக்கை

  By பரமத்தி வேலூர்,  |   Published on : 22nd January 2015 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி அருகே, பில்லூரில் 6 மாத பெண் குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், அந்த கிராமத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையில் மருத்துவக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

  பரமத்தி அருகே, பில்லூரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி விஜயா. இந்தத் தம்பதியினரின் 6 மாத பெண் குழந்தை பிரியதர்ஷிணி. இக் குழந்தைக்கு கடந்த சில நாள்களுக்கு முன் திடீரென காய்ச்சல் வந்ததாம். உடனடியாக அவரை பரமத்தி வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர்.

  பின்னர், தீவிர சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு குழந்தை பிரியதர்ஷிணியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதாகத் தெரிவித்தனராம். இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் அக் குழந்தையைச் சேர்த்தனர். அங்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

  இந்த நிலையில், நல்லூர் மருத்துவ அலுவலர் மாணிக்கவாசகம், மருத்துவர் பரணிதரன், பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத்குமார், செல்லப்பன் ஆகியோர் கொண்ட குழுவினர் பில்லூர் பகுதியில் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, 30 பேர் கொண்ட 6 குழுவினர் அமைக்கப்பட்டு, அந்தப் பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai