Enable Javscript for better performance
மனைப்பட்டா கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    மனைப்பட்டா கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

    By நாமக்கல் / ராசிபுரம்,  |   Published on : 22nd January 2015 04:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வீட்டு மனைப்பட்டா கோரி, நாமக்கல் வட்டாச்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

    வகுரம்பட்டி, கோனாம்பரப்பு கிராமங்களில் குடியிருக்கும் மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க கோரி, நாமக்கல் வட்டாச்சியர் அலுவலகத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், காத்திருக்கும் போராட்டம் நாமக்கல் மாவட்டப் பகுதிச் செயலர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது.

    போராட்டத்தில், 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முதியோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்குத் தகுதி இருந்தும் நிறுத்தப்பட்ட உதவித்தொகை ரூ.1,000-யை தொடர்ந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதையடுத்து, காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கலைந்து செல்லுமாறு கூறினர். இருப்பினும், கலைந்து செல்லாததால் போலீஸார் அவர்களை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

    ராசிபுரத்தில்...: ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையிட்ட விவசாயத் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 8 பெண்கள் உள்ளிட்ட 24 பேரை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

    போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜு தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ. பிரதேசக்குழு உறுப்பினர் எஸ்.கந்தசாமி தொடக்கி வைத்துப் பேசினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai