சுடச்சுட

  

  "மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த 40 ரோந்துக் குழுக்கள்'

  By நாமக்கல்  |   Published on : 22nd January 2015 04:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சாலைப் பாதுகாப்பில் விழிப்புணர்வு பெறும் வகையில், 40 ரோந்துக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர். செந்தில்குமார் தெரிவித்தார்.

  நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில், சாலைப் பாதுகாப்பு வார விழா, சாலைப் பாதுகாப்பு ரோந்துக் குழு தொடக்கவிழா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

  விழாவில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாதுகாப்புடன் சாலைப் பயணத்தை மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

  மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சாலைப் பாதுகாப்பில் விழிப்புணர்வு பெறும் வகையில் புதிதாக அமைக்கப்பட்ட ரோந்துக் குழுக்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர் செந்தில்குமார் தொடக்கிவைத்துப் பேசியது:

  விபத்து ஏற்பட்டால் அது நம்மையும் சமுதாயத்தையும் பாதிக்கும். இந்தியாவில் கடந்த ஆண்டு சுமார் 1.38 லட்சம் பேர் உயிரிழந்துள்ளர். தமிழகத்தில் 12 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 2012-13-ஆம் ஆண்டுகளில் 932 பேரும், 2014-இல் 418 பேரும் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். காவல், போக்குவரத்து, வருவாய் உள்ளிட்ட அரசு துறைகளின் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் மாவட்டத்தில் சாலை விபத்துகளால் உயிரிழப்பு குறைந்து வருகிறது.

  மாணவப் பருவத்திலேயே சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அது அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் பயன்னுள்ளதாக இருக்கும். எனவே, நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளை கொண்டு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாமக்கல், திருச்செங்கோட்டில் 40 கல்வி நிறுவனங்களில் தலா 50 பேர் வீதம் 2 ஆயிரம் மாணவ, மாணவிகளை கொண்ட சாலைப் பாதுகாப்பு ரோந்துக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

  இவர்கள் கல்வி நிறுவனங்களில் காலை, மாலை நேரங்களில் 10 பேர் கொண்ட குழுவாக சாலையில் நின்று மாணவ, மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள் என்றார்.

  இதில், நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரமோகன், வருவாய்க் கோட்டாட்சியர் காளிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai