Enable Javscript for better performance
விசைத்தறி மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    விசைத்தறி மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தல்

    By நாமக்கல்  |   Published on : 22nd January 2015 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விசைத்தறிக் கூடங்களுக்கான மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    வெண்ணந்தூரில் நகர காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம், நகரத் தலைவர் சிங்காரம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

    இதில், விசைத்தறி நெசவாளர்களைப் பாதிக்கும் ரகக் கட்டுப்பாடு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். வெண்ணந்தூரில் இருந்து சேலத்திற்கு இரவு, 8.45 மணிக்கு இயக்கப்படும் அரசு நகரப் பேருந்து, ஒரு மாதமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், இரவு நேரங்களில் சேலம் உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்று, ரயிலைப் பிடிப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. எனவே, வெண்ணந்தூரில் இருந்து இரவு, 8.45 மணிக்கு இயக்கப்படும் எண் 40 அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்.

    வெண்ணந்தூர் பேரூராட்சி நிர்வாகம், விசைத்தறி தொழிலுக்கு தொழில் வரியை உயர்த்தியதை திரும்பப் பெற வேண்டும். வெண்ணந்தூர் அண்ணா சிலை, காமராஜர் சிலை பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இங்கு போக்குவரத்து காவலரை நிறுத்தி, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். விசைத்தறி மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில், நகர துணைத் தலைவர் காசிபெருமாள், செயலர்கள் மணி, வெங்கடாசலம், நிர்வாகிகள் தங்கமுத்து, தங்கவேல், கந்தசாமி, மோகன், சுப்பிரமணியம், நடராஜன், வஜ்ரவேல், ராமலிங்கம், ராஜேந்திரன், கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai