Enable Javscript for better performance
அனைத்து குடும்பங்களுக்கும் வங்கிக் கணக்கு - Dinamani

சுடச்சுட

    

    அனைத்து குடும்பங்களுக்கும் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதால், நாமக்கல் மாவட்டத்தில் பிரதமரின் மக்கள் நிதிச் சேவைத் திட்டம் முழுமையடைந்தது என்று மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிரதமர் மக்கள் நிதி திட்டத்தின்கீழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு வங்கிக் கணக்காவது துவங்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

    இதன் அடிப்படையில் வங்கிக் கிளைகள் அனைத்தும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி தொடங்கி வங்கிக் கணக்கு இல்லாத குடும்பம் ஒவ்வொன்றுக்கும் ஒரு வங்கிக் கணக்கு துவங்குவதில் மும்முரமாக ஈடுபட்டு முடித்தனர்.

    வங்கிகள் தங்களுடைய சேவைக்குள்பட்ட பகுதிகளில் எடுத்த கணக்கெடுப்பின்படி வங்கிக் கணக்கு இல்லாத குடும்பங்களில் பிரதமர் மக்கள் நிதித் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டதில் உள்ள 5.02 லட்சம் குடும்பங்களில் ஒரு வங்கிக் கணக்கு துவக்கப்பட்டுள்ளது. எந்தக் குடும்பமும் விடுபடவில்லை என்பதை உறுதி செய்து, பிரதமரின் மக்கள் நிதிச் சேவைத் திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் முழுமையடைந்தது என்று அறிவிக்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai