சுடச்சுட

  

  காங்கிரஸ் கட்சி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

  By நாமக்கல்  |   Published on : 23rd January 2015 02:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.

  கட்சியின் மாவட்ட தலைவர் ஆர். செழியன் தலைமை வகித்தார். கட்சியின் நிர்வாகிகள் பி.எ.சித்திக், வீரப்பன், ஜி.ஆர்.சுப்ரமணி முன்னிலை வகித்தனர். கட்சியின் புதிய நிர்வாகிகளை மாவட்ட தலைவர் செழியன் அறிமுகப்படுத்தி பேசினார்.

  அதன்படி மாவட்ட துணைத் தலைவர்களாக டி.கே. ராஜேஸ்வரன், எம்.பொன்னம்பலம் உள்பட ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதுபோல் மாவட்ட பொதுச்செயலாளராக எம்.குமரன் உள்பட 11 பேர் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்ட செயலர், பொருளாளர் மற்றும் நகர, பேரூர் நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகளுக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai