சுடச்சுட

    

    கோயிலுக்குள் வந்த உணர்வை ஏற்படுத்த முயற்சிக்கிறோம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர்

    By நாமக்கல்  |   Published on : 23rd January 2015 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், கோயிலுக்குள் இருப்பதைபோன்ற உணர்வை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம் என்றார் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெ.மோகன்.

    நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மையான மருத்துவமனை திட்டம் கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. இதன் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மருத்துவமனை வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

    தூய்மையான மருத்துவமனை திட்ட பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவு பணியாளர்கள் வழக்கமாக ஒவ்வொரு வாரமும் ஒரு சிறப்பு வாரமாக அறிவிக்கப்பட்டு துப்புரவு பணிகளை செய்து வருகின்றனர்.

    அதன்படி இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஜனவரி மாதம் 3 வது வாரம் பசுமை வாரம் என அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டது. அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று ஏழை, எளிய நோயாளிகள் வரும் போது சுத்தமான மருத்துவமனை சூழலை உருவாக்கி தர வேண்டும் என்பது இந்த வாரத்தின் நோக்கம்.

    இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெ.மோகன் கூறுகையில், மருத்துவமனை முழுவதும் புல் புதர்களை சுத்தம் செய்து, பூங்காக்கள் அமைத்து நோயாளிகளின் மனதிற்கு இதமான சூழல் உருவாக்கி தர வேண்டும் என்றும், நோயாளிகளின் நலன் கருதி சுத்தமான, பசுமை நிறைந்த ஆலயமாக நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை மாற்றுவதே எங்கள் நோக்கம் என்றார்.

    உறைவிட மருத்துவர் அ. ராஜ்மோகன், முதுநிலை குடிமுறை மருத்துவர்கள் அறிவழகன், சங்கர், துப்புரவு பணியாளர்களுக்குகான முதன்மை அலுவலர் பெ. ரங்கநாதன், தலைமை செவிலியர் ஞானாம்பாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai