சுடச்சுட

  

  தனியார் துறை வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

  By நாமக்கல்  |   Published on : 23rd January 2015 02:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்ற விருப்பமுள்ள வேலைவாய்ப்பற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் வரும் 24ஆம் தேதி நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்களுக்கு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

  வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் வரும் 24ஆம் தேதி காலை 9 மணிக்கு நாமக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் வர வேண்டும்.

  5ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்துள்ளவர்கள் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் குடும்ப அட்டை, கல்விச் சான்றிதழ், ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களை கொண்டுவரவேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தை 04286-281131 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai