சுடச்சுட

    

    நாமக்கல் மாவட்டத்தில் 11,958 பேருக்கு இலவச மனைப்பாட்டா ஆட்சியர் தகவல்

    By நாமக்கல்  |   Published on : 23rd January 2015 02:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டத்தில் 11,958 பேருக்கு இலவச மனைப்பாட்டா வழங்குப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே வடவத்தூரில் மனு நீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. சேந்தமங்கலம் எம்எல்ஏ ஆர்.சாந்தி முன்னிலை வகித்தார். தனித்துணை ஆட்சியர் சூரியபிரகாஷ் வரவேற்றார்.

    பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியர் பேசியது:விவசாய துறைக்கு அரசு அளித்துவரும் பல்வேறு மானியங்கள் மூலம் நாமக்கல் மாவட்டத்திற்கு கடந்த ஆண்டு உணவு தானிய உற்பத்திக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கினையும் மிஞ்சி 2.79 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    வருவாய்த்துறையின் அம்மா திட்டம் மூலம் 42,200க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டத்தில் ரூ.12 ஆயிரம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் இதுவரை 11,958 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 161 பயனாளிகளுக்கு ரூ.11,50,751 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். வடவத்தூர் ஊராட்சி தலைவர் ஏ.ராஜேந்திரன், நாமக்கல் வட்டாட்சியர் கதிரேசன், தனி வட்டாட்சியர் ரத்தினம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai