சுடச்சுட

    

    மனநலம் பாதித்தவர்களை அன்பு காட்டி, அரவணைத்து பாதுகாக்க வேண்டும் ஆட்சியர்

    By நாமக்கல்  |   Published on : 23rd January 2015 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மனநலம் பாதித்தவர்களை அன்பு காட்டி, அரவணைத்து பாதுகாக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி.

    நாமக்கல் மாவட்ட புதுவாழ்வு திட்டத்தின் சார்பில் எருமப்பட்டியில் மன நல மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. புதுவாழ்வுத்திட்ட மாவட்ட திட்ட மேலாளர் தேவக்குமார் வரவேற்றார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆர்.பாலாஜி, சாந்தி வனம் அறக்கட்டளை மனநல ஆலோசகர்கள் நவீன்குமார், அரவிந்தன், சுகுமாரன், கனகராஜ் ஆகியோர் மனநல ஆலோசனைகளை வழங்கினர்.

    மருத்துவ முகாமினை தொடங்கிவைத்து ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி பேசியது:கிராமப்புற மக்களின் வறுமையை ஒழித்து வாழ்வாதாரத்தை பெருக்கி, வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதுதான் புதுவாழ்வு திட்டத்தின் நோக்கம்.

    நாமக்கல் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் புதுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுவாழ்வு திட்டம் மூலம் இதுவரை 3 மன நல மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

    இம்முகாம்கள் மூலம் 226 நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 126 நபர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும், 100 நபர்களுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 239 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டையும், 52 நபர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிக்கான அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 280 நபர்கள் சிறப்பு சுயஉதவிக்குழுக்களில் இணைக்கப்பட்டுள்ளனர்.

    மன நோய் என்பது மற்ற நோய்களைப் போன்று முற்றிலும் குணமாக்கக்கூடியது. மனநலம் பாதிக்கப்பட்டவரை எக்காரணத்தைக் கொண்டும் புறக்கணிக்ககூடாது. தற்போது நவீன மருத்துவ முறைகள் சிறப்பு மருத்துவ சிகிச்சைகளால் மனநலம் பாதிக்கப்பட்டோரை எளிதில் குணமாக்க முடியும். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பும், அரவணைப்பும் தேவைப்படுகிறது.

    நல்ல குடும்ப உறவுகளும், மனித நேயத்தோடு ஆதரவு அளிப்பவர்களும் இருந்தால் மனநலம் பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமாகிவிடுவர். மனநலம் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்காமல் அவர்களிடம் அன்பு காட்டி அரவணைக்க வேண்டும் என்றார்.

    மாவட்ட புதுவாழ்வு திட்ட மாவட்ட முகமையின் செயலர் விக்னேஸ்வரி நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai