சுடச்சுட

    

    மயானத்துக்குத் தடம் கேட்டு மூதாட்டியின் சடலத்துடன் கிராம மக்கள் போராட்டம்

    By நாமக்கல்  |   Published on : 23rd January 2015 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இறந்த மூதாட்டியின் சடலத்துடன் மயானத்துக்குத் தடம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் முடிவுக்கு வராத நிலையில், வருவாய்த் துறை அதிகாரிகள் மூதாட்டியின் உடலை நாமக்கல்லுக்கு எடுத்துவந்து அடக்கம் செய்தனர்.

    நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே பொட்டணம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ரங்கம்மாள் என்ற தலித் வகுப்பைச் சேர்ந்த மூதாட்டி புதன்கிழமை இரவு இறந்தார். இதையடுத்து, அவரது உடலை மயானத்துக்குக் கொண்டுசெல்ல வியாழக்கிழமை காலை முற்பட்டபோது, வழக்கமாகச் செல்லும் பாதையான முத்துசாமி என்பவரது தோட்டத்தில் வேலிபோட்டு அடைக்கப்பட்டிருந்ததால், உறவினர்கள் மூதாட்டியின் சடலத்தை அங்கு சாலையில் வைத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, நாமக்கல் கோட்டாட்சியர் கே.காளிமுத்து, வட்டாட்சியர் கதிரேசன் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகளும், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் மனோகரன், 5 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல் துறையினரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

    வருவாய்த் துறையினர் சமரச முயற்சி மேற்கொண்டனர். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், ஏற்கெனவே இருந்த வழித்தடத்தில் உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என நிலத்துக்கு கம்பி வேலி போட்ட நபர் தெரிவித்துவிட்டார்.

    இதையடுத்து, நிலையை விளக்கிக் கூறிய வருவாய்த் துறை அதிகாரிகள் மாற்றுப் பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், அதை ஏற்காமல் தொடர்ந்து 4 மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாலை 4 மணி அளவில் காவல் துறையினர் முதலில் பெண்களைக் கைதுசெய்து, காவல் வாகனத்தில் ஏற்ற முற்பட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பரவலாகக் கலைந்து சென்றனர். இதனிடையே, ஏற்கெனவே தயாராக இருந்த அமரர் ஊர்தியில் உடலை ஏற்றி, நாமக்கல் மயானத்துக்குக் கொண்டு சென்ற வருவாய்த் துறை அதிகாரிகள் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai