சுடச்சுட

    

    குமாரபாளையம் கட்டடத் தொழிலாளி கொலை:  ஆட்டோ ஓட்டுநர்கள் உள்பட 3 பேர் கைது

    By  குமாரபாளையம்,  |   Published on : 24th January 2015 09:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமாரபாளையம் டாஸ்மாக் மதுக்கடை பாரில் கட்டடத் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த ஆட்டோ டிரைவர்கள் உள்பட மூவரைப் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
     குமாரபாளையம் வட்டமலையைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி சந்திரன் (35). இவர், கடந்த சில நாள்களுக்கு முன்னர் குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு அருகே டாஸ்மாக் மதுக்கடையில் மது அருந்தினார். அப்போது, அங்கு மது அருந்திய ஆட்டோ டிரைவர்களான குமாரபாளையம் காவேரி வீதியைச் சேர்ந்த சண்முகம் (41), எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ராம்குமார் (29), சத்தியாபுரியைச் சேர்ந்த வேணுகோபால் (39) ஆகியோருடன் தகராறு ஏற்பட்டது.
     இதனால், ஆத்திரமடைந்த மூவரும் சேர்ந்து தாக்கியதில் சந்திரன் உயிரிழந்தார். இவ்வழக்கில் சண்முகம் உள்ளிட்ட மூவரையும் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்காவலுக்கு அனுப்பினர். குடிபோதையில் கட்டையால் அடித்துக் கொடூரமான முறையில் கொலை செய்த மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
     
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai