சுடச்சுட

    

    நாமக்கல் அருகே 14 வயதுச் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
     நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே பெரும்பாளையம்காட்டைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கும், சேலம் பொன்னம்மாப்பேட்டையைச் சேர்ந்த ரங்கராஜ் (27) என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இவர்களின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.
     இதுகுறித்து நாமக்கல் சைல்டுலைன் அமைப்பினருக்கு வியாழக்கிழமை புகார் வந்தது. இவர்கள் அளித்த தகவலின்பேரில், பள்ளிபாளையம் வருவாய் ஆய்வாளர் தங்கராஜ், காவல் துணை ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் லட்சுமியின் பெற்றோரிடம் பேசினர். சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
     இதையடுத்து திருமணத்தை நிறுத்திய பெற்றோர், சிறுமியை தறிப்பட்டறையிலிருந்து நிறுத்திவிட்டு பள்ளியில் சேர்த்துப் படிக்க வைப்பதாக உறுதியளித்து எழுதிக் கொடுத்தனர்.
     
     
     
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai