சுடச்சுட

    

    தேசிய இளம் சுற்றுச் சூழல் விஞ்ஞானிகள் மாநாடு:  நாமக்கல் மாணவர்களின் கட்டுரைக்கு மூன்றாமிடம்

    By  நாமக்கல்  |   Published on : 24th January 2015 09:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய அளவிலான இளம் சுற்றுச் சூழல் விஞ்ஞானிகள் மாநாட்டில், நாமக்கல் மாணவர்களின் ஆய்வுக் கட்டுரை 3-ஆம் இடம் பெற்றது.
     புதுதில்லியில் உள்ள தேசிய பால்பவன் சார்பில் குஜராத் மாநிலம் சூனாகாட் பால்பவனில் தேசிய அளவிலான இளம் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மாநாடு அண்மையில் நடைபெற்றது.
     நாமக்கல் மாவட்ட பால்பவன் சார்பில் புதன்சந்தை ஸ்ரீகுருகுலம் மாடல் பள்ளியைச் சேர்ந்த வி.கவிமயில், மோசி டேனியல் தேவசகாயம் ஆகிய இரண்டு மாணவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.
     இந்த மாணவர்கள் கொல்லிமலையில் உள்ள பாரம்பரிய நீர் மேலாண்மை, வனப் பாதுகாப்பு மற்றும் வீட்டு வைத்திய முறைகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளைப் புகைப்படங்களுடன் சமர்ப்பித்தனர். இந்த ஆய்வுக்கட்டுரை தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்றது.
     சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பாதுகாவலராகச் சென்ற ஸ்ரீகுருகுலம் மாடல் பள்ளி முதல்வர் எம்.சார்லிகேத்தரின் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி, ஜவஹர் சிறுவர் மன்றத் திட்ட இயக்குநர் மா.தில்லை சிவக்குமார் ஆகியோர் பாராட்டினர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai