Enable Javscript for better performance
ரெளடி கொலை வழக்கில் தேடப்பட்ட 8 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பள்ளிபாளையத்தில் 2013-இல் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த 12 பேரில் 8 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
     நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதி ஆவாரங்காடு மதுரை வீரன் கோயில் அருகே காவிரி ஆற்றின் நடுவே கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி, 30 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் தலை, கை, கால்கள் வெட்டப்பட்டு, அழுகிய நிலையில் மிதப்பதாக அமானி கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் புகார் அளித்தார்.
     பள்ளிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். இறந்து போனவர் சேலம் மாவட்டம், சங்ககிரி சந்தைப்பேட்டை, பால்வாய் தெருவைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் நாகராஜன் (25) என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர் ரெüடி கும்பலைச் சேர்ந்தவர்.
     இவரும், நண்பர் கலைச்செல்வன் என்பவரும் ஈரோடு, கருங்கல்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்குத் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சிறையிலிருந்த வெங்கடேஷ் என்ற ரோகித் வெங்கடேசன் என்பவருடன் பிரச்னை ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் நாகராஜனை, ரோகித் வெங்கடேசன் உள்ளிட்டோர் கொலை செய்தது தெரியவந்தது.
     இவ் வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான வெங்கடேசன் என்ற ரோகித் வெங்கடேசன், அதே கும்பலைச் சேர்ந்த ராஜா என்ற பயர் சர்வீஸ் ராஜா, பத்மநாபன், பிரகலாதன் மற்றும் பிரபு ஆகியோரால் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி ஈரோடு மரப்பாலம் டாஸ்மாக் பாரில் கொலை செய்யப்பட்டார்.
     நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப் பதிவேட்டுக் கூட காவல் துணைக் கண்காணிப்பாளர் கே.பரமேஸ்வரா மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் ராஜூ, காவல் உதவி ஆய்வாளர் சந்திரன், நடராஜன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் சகாயராஜ், வெங்கடாஜலம், பால்ராஜ், மணி மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
     இவ் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் ஈரோட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக 12 பேரில் 8 பேரை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
     கைது செய்யப்பட்டவர்கள் விவரம்: ஈரோட்டைச் சேர்ந்த சங்கர் மகன் ராஜா என்ற பயர் சர்வீஸ் ராஜா (32), மாதேஸ்வரன் மகன் கலைச்செல்வன் (25), முகமது ரபி மகன் ரகமதுல்லா (22), குப்புசாமி மகன் குணா என்ற குணசேகரன் (25), அர்ஜுனன் மகன் ஈஸ்வரன் (39), குமாரபாளையத்தைச் சேர்ந்த கந்தவேல் மகன் கெüதம் (21), சிவசுப்பிரமணியம் மகன் பிரகாஷ் (25), மணி மகன் சோமு என்ற சோமசுந்தரம் (26) ஆகிய 8 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் நான்கு பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai