சுடச்சுட

  

  வகுப்பறையில் 10ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

  By  நாமக்கல்,  |   Published on : 24th January 2015 09:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் அருகே பள்ளி வகுப்பறையில் 10-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
   செய்து கொண்டார்.
   நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகேயுள்ள காரைக்குறிச்சி புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகள் அம்பிகா (15). இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், பாட்டி அங்கம்மாளின் பராமரிப்பில் அம்பிகா இருந்தார்.
   இவர் வெள்ளிக்கிழமை மாலை பள்ளி வகுப்பறையில் உள்ள மின்விசிறி கம்பியில் துப்பட்டாவால் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார்.
   இதைக் கண்ட சக மாணவிகள் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர்.
   இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மாணவியின் உடலை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
   இதுகுறித்து போலீஸ் தரப்பில்
   கூறியது:
   அரையாண்டுத் தேர்வில் அம்பிகா குறைவான மதிப்பெண் பெற்றதால், தற்போது நடைபெற்று வரும் திருப்புதல் தேர்வுக்கு வகுப்பாசிரியர் அனுமதிக்கவில்லையாம். இதனால், மனமுடைந்த அம்பிகா வகுப்பறையில் தனியாக இருந்த போது, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
   மாணவியின் உறவினர்கள் பள்ளி முன் திரண்டனர். அங்கு வந்த நாமக்கல் எஸ்.பி. (பொறுப்பு) லோகநாதன், கூடுதல் எஸ்.பி. சந்திரமோகன், டிஎஸ்பி மனோகரன் ஆகியோர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.
   பள்ளி வளாகத்தில் போலீஸார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai