சுடச்சுட

    

    வாகன விபத்துகள் நடக்காமல் இருக்க கோயிலில் யாகம்: ஒட்டுநர்கள் பங்கேற்பு

    By  ராசிபுரம்  |   Published on : 24th January 2015 09:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாலைகளில் வாகன விபத்துகள் நடக்காமல் இருக்க ராசிபுரம் அருகே அரியாகவுண்டம்பட்டி கோயிலில் வாகன ஓட்டுநர்கள் பங்கேற்ற யாகசாலைப் பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     அரியாகவுண்டம்பட்டி ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ நாக கன்னி அம்மன் கோயிலில் மஹா மாருதி ஆஞ்சநேயர் சுவாமிக்கு யாக சாலைப் பூஜைகள் நடந்தன. வாகன ஒட்டுநர்களுக்கு விபத்துகள் நடக்காமல் இருக்கவும், பொதுமக்களின் நலனிற்காகவும் இது நடந்தது.
     இதில் திரளான வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
     கொங்காலம்மன் கோயிலில் வாகன ஓட்டுநர்களுக்கு சாலை விபத்துகள் நிகழாமல் பாதுகாக்கவும், அவர்களது குடும்பம் செழிக்கவும், திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கவும் யாகம் நடத்தப்பட்டது.
     நாமகிரிப்பேட்டை ஊராட்சிக் குழுத் தலைவர் இ.கே.பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai