கொங்கணாபுரம் அருகே விபத்தில் இளைஞர் சாவு
By எடப்பாடி, | Published on : 25th January 2015 03:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் விபத்தில் இளைஞர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
கொங்கணாபுரத்திலிருந்து தங்கராஜ் (30) என்பவர் சின்னப்பம்பட்டியில் உள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் கச்சுப்பள்ளி அருகே சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தங்கராஜும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சண்முகம் (50)என்பவரும் பலத்த காயமடைந்தனர்.இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் காயமடைந்த இருவரும் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் வழியில் தங்கராஜ் உயிரிழந்தார். சண்முகம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து எடப்பாடி காவல் நிலைய ஆய்வாளர் டி.சுப்பிரமணியம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.