சுடச்சுட

  

  தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்

  By நாமக்கல்  |   Published on : 25th January 2015 03:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் செய்தியாளர்களுக்கு அவர் சனிக்கிழமை அளித்த பேட்டி:

  வரும் 26-ஆம் தேதி தமிழக மக்களின் உரிமையை நிலை நாட்டக்கூடிய வகையில் கச்சத் தீவில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமருக்கும், தமிழக முதல்வருக்கும் வேண்டுகோள் வைக்கிறோம். ஒப்பந்தப்படி அங்கே தேசியக் கொடி ஏற்றத் தடை கிடையாது.

  எனவே, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை கச்சத் தீவில் ஏற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் எங்கள் கட்சியின் ராமநாதபுரம் மாவட்டச் செயலர் தர்மா தலைமையில் 100 பேர் கொண்ட போராட்டக் குழுவினர் கச்சத் தீவுக்குச் சென்று தேசியக் கொடியேற்றுவர்.

  மொழிப் போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் கொண்டாடுகிறார்கள். இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு எங்களது கோரிக்கையாக இந்தியா முழுவதும் உள்ளது போல மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

  வரும் 30-ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 108 குடும்பங்கள் தாய்மதமான இந்து மதத்தில் இணையும் விழா நடத்த உள்ளோம். இந்த விழாவை இந்து சமய அறநிலையத் துறை முன்னின்று நடத்த வேண்டும். மாதொருபாகன் நாவல் எழுத்தாளருக்கு ஆதரவாக பேசும் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார் அர்ஜுன் சம்பத்.

  கட்சியின் மாநில அமைப்புச் செயலர் கணபதிரவி, கோவை மண்டலத் தலைவர் ஜெம்ஸ் வெங்கடேஷ், திருச்செங்கோட்டைச் சேர்ந்த லோகநாதன், தட்சிணாமூர்த்தி, திருநாவுக்கரசு ஆகியோர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai