சுடச்சுட

  

  தாய்மொழிக் கல்வியே ஆராய்ச்சிக்குப் பெரும் பயனளிக்கும்

  By குமாரபாளையம்  |   Published on : 25th January 2015 03:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தாய்மொழியில் கல்வி பயில்வதன் மூலம் எதிர்கால அறிவியல் ஆராய்ச்சிக்குப் பெரும் பயனளிக்கும் என பிரம்மோஸ் ஏவுகணைத் தொழில்நுட்பத் திட்ட தலைமை விஞ்ஞானி ஏ.சிவதாணுப்பிள்ளை தெரிவித்தார்.

  குமாரபாளையம் எஸ்எஸ்எம் பொறியியல் கல்லூரியின் 13-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரித் தலைவர் எம்.எஸ்.மதிவாணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. முதல்வர் ஜெ.மாதேஸ்வரன் வரவேற்றார். மாணவ, மாணவியர் 447 பேருக்கு பட்டங்களை வழங்கிய விஞ்ஞானி ஏ.சிவதாணுப்பிள்ளை பேசியது:

  பொறியியல் கல்வி பயிலும் மாணவர்கள் புதிய சிந்தனைகளுடன், பயனளிக்கும் அறிவியல் தொழில் நுட்பங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றார் சிவதாணுப்பிள்ளை.

  செய்தியாளர்களிடம் சிவதாணுப்பிள்ளை கூறியது: விண்வெளி ஆராய்ச்சி, ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தை இந்தியா அடைந்துள்ளது. திறன் மேம்பாடு, கனரகத் தொழில் வளர்ச்சியால் தேவையான பொருள்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் திறனைப் பெற்றுள்ளோம். 70 சதவீதம் ராணுவத் தளவாடங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றை நமது நாட்டிலேயே தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டால் தன்னிறைவு பெறலாம். இந்தியாவின் கல்வி முறையை ஆராய்ச்சிக்கான கல்வியாக மாற்ற வேண்டும். 80 சதவீத ஆராய்ச்சி, 20 சதவீத கற்றல் முறைக்கு வகுப்பறைக் கல்வியை மாற்றினால் மாணவ, மாணவியரின் சிந்தனையில் ஆராய்ச்சியைப் புகுத்த முடியும். கல்வி நிறுவனங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் நேரடித் தொடர்பு ஏற்படுத்துவதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி அதிகரிப்பு விகிதம் வேகமாக இருக்கும். மாணவ சமுதாயம் வெளிநாடுகளுக்குப் பணிக்குச் செல்வதைத் தடுக்க அவர்களுக்கு போதிய வாய்ப்புகளை இந்தியாவிலேயே அளித்தால் வளர்ச்சி பெறலாம். கல்வி, ஆராய்ச்சி தாய்மொழி சார்ந்திருந்தால் புரிந்து கொள்வதும், தெரிந்து கொள்வதும் எளிதாவதோடு, புதிய ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளுக்கு உதவியாக இருக்கும். நானோ தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம் சுகாதாரம், மருத்துவத்தில் சிறந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவன் மூலம் பெரும் பயன் கிடைக்கும் என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai