சுடச்சுட

    

    திருச்செங்கோட்டில் ரூ.80 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

    By நாமக்கல்,  |   Published on : 25th January 2015 03:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செங்கோடு கூட்டுறவு வேளாண் விற்பனைச் சங்கத்துக்கு வந்த 1,500 குவிண்டால் மஞ்சள் ரூ.80 லட்சத்துக்கு சனிக்கிழமை ஏலம் போனது.

    ஆத்தூர், கெங்கவல்லி, கூகையூர், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூர், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர், நாமக்கல், மேட்டூர், பூலாம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1,500 குவிண்டால் மஞ்சளை ஏலத்துக்குக் கொண்டு வந்தனர்.மஞ்சளைக் கொள்முதல் செய்ய, ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய பகுதிகளிலிருந்து 30-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்தனர். ரூ. 80 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் போனது. விரலி ரகம் குவிண்டாலுக்கு ரூ.6,973 முதல் ரூ.8,799 வரையும், கிழங்கு ரகம் ரூ.7,309 முதல் ரூ.8,255 வரையும், பனங்காளி ரகம் ரூ.10,700 முதல் ரூ.14,040 வரையும் ஏலம் போயின. விவசாயிகளுக்கு சனிக்கிழமையே பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக சங்க அலுவலர்கள் தெரிவித்தனர்.

    கொப்பரை ஏலம்: திருச்செங்கோடு கூட்டுறவு வேளாண் விற்பனைச் சங்க மல்லசமுத்திரம் கிளையில் நடந்த தேங்காய் கொப்பரை ஏலத்தில் முதல் ரகம் கிலோவுக்கு ரூ.80.65 முதல் ரூ.96.75, இரண்டாம் ரகம் கிலோவுக்கு ரூ.24.75 முதல் ரூ.40.15 வரை விற்பனையானது. விவசாயிகள் கொண்டுவந்த 200 சிப்பம் கொப்பரை ரூ.7 லட்சத்துக்கு விற்பனையானது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai