சுடச்சுட

    

    திருமலை திருப்பதிக்கு மலர் தொடுக்கும் விழா

    By ராசிபுரம்,  |   Published on : 25th January 2015 03:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் உற்சவ விழாவிற்கு மலர்கள் அனுப்புவதற்காக ராசிபுரம் நகரில் உள்ள சௌராஷ்டிரா விப்ரகுல சமுதாயக் கூடத்தில் மலர் தொடுக்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

    கொங்கணாபுரம் திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் மலர்கள் சேகரிக்கப்பட்டு, திருமலை திருப்பதிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. திருப்பதி உற்சவ விழாவிற்கு மலர் அனுப்ப ராசிபுரம் சௌராஷ்ட்ரா விப்ரகுல பஜனை மடத்தில் பக்தர்கள் சார்பில் நடந்த மலர் தொடுக்கும் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று மலர் தொடுத்தனர்.

    மல்லி, சாமந்தி, ரோஜா, மேரிகோல்ட், துளசி, அரளி, மருவு, தாமரை, சம்பங்கி உள்ளிட்ட 3 டன் மலர்கள், கரும்பு, தென்னம்பாளை, தென்னங்குருத்து, பாக்கு குலை, இளநீர், மாங்காய் போன்றவை பக்தர்களிடம் சேகரம் செய்யப்பட்டது. இம்மலர்களை மாலை ஆக்கி அனுப்பும் பணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஈடுபட்டனர்.

    திருமலை திருப்பதிக்கு ஆண்டுதோறும் இது போன்று பல்வேறு பகுதிகளிலிருந்து மலர்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதன் முறையாக ராசிபுரம் பகுதியில் மலர்கள் சேகரிக்கப்பட்டு திருமலைக்கு அனுப்பப்படுகிறது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai