Enable Javscript for better performance
தேசிய ஊரக விளையாட்டுப் போட்டியில் நாமக்கல் மாணவர்கள் சாதனை- Dinamani

சுடச்சுட

    

    தேசிய ஊரக விளையாட்டுப் போட்டியில் நாமக்கல் மாணவர்கள் சாதனை

    By நாமக்கல்,  |   Published on : 25th January 2015 03:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுதில்லியில் நடைபெற்ற தேசிய ஊரக விளையாட்டுப் போட்டிகளில் நாமக்கல் மாவட்டப் பள்ளி மாணவர்கள் பல பிரிவுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    தேசிய ஊரக விளையாட்டுக் குழுமத்தின் சார்பில் புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற 4-வது அகில இந்திய ஊரக விளையாட்டுப் போட்டிகளில் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து 45 மாணவர்கள் பங்கேற்றனர்.

    இதில் 17 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் நாமக்கல் லிட்டில் ஏஞ்சல் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரிதா குண்டு மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகளில் தங்கப் பதக்கமும், அதே பள்ளி மாணவர் தயாளன் ஜுடோ போட்டியில் தங்கப்பதக்கமும், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் குமரகுருபரன் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கமும், அதே பள்ளி மாணவர் அஜித். மேல்மூத்தோர் கபடி போட்டியில் வெள்ளிப் பதக்கமும், பாரதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பிரதீப் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கமும் மேலும் 8 மாணவர்கள் வெள்ளிப் பதக்கங்களையும், 2 மாணவர்கள் வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.

    19 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் காளப்பநாய்க்கன்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் தமிழ்ச்செல்வன் தொடர் ஓட்டப்போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நாமக்கல் விளையாட்டு விடுதி மாணவிகள் கபடிப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றனர். திருச்செங்கோடு வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தடகளப் போட்டிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

    சாதனை படைத்த மாணவர்களுக்கு பதக்கங்களை அணிவித்து, சான்றிதழ்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தார். மேலும் தெற்கு ஆசிய போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களைப் பெற்று நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை பெற்றுத்தர வேண்டுமென அவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நாமக்கல் மாவட்ட இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அலுவலர் பெரியகருப்பன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திருநாவுக்கரசு, விளையாட்டு வீரர்கள் குழு அணி மேலாளர் செந்தில்குமார், பயிற்சியாளர்கள் சிலம்பரசன், சதீஷ்குமார், சிவக்குமார், ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai