சுடச்சுட

  

  பரமத்தி வேலூரில் வாழைத்தார் விலை சரிவு

  By பரமத்தி வேலூர்,  |   Published on : 25th January 2015 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை மையத்தில் வாழைத்தார்களின் விலை தார் ஒன்றுக்கு ரூ.150 வரை சரிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

  பரமத்தி வேலூர் சந்தைக்கு சனிக்கிழமை சுமார் 600 வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

  கடந்த வாரத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.450, ரஸ்தாலி ரூ.400, பச்சைலாடன் ரூ.300, கற்பூரவள்ளி ரூ.250 வீதம் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.8-க்கு விற்பனையானது.

  சனிக்கிழமை பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300. ரஸ்தாலி ரூ.250, பச்சைலாடன் ரூ.250, கற்பூரவள்ளி ரூ.200 வீதம் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6-க்கு விற்பனையானது.

  வரத்துக் குறைந்துள்ளதாலும் அதிக அளவில் வியாபாரிகள் வராததால் வாழைத்தார்களின் விலை சரிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai