சுடச்சுட

    

    பெண்கள், குழந்தைகள், முதியோர்களுக்கான சட்டங்கள் குறித்த கருத்தரங்கம்

    By நாமக்கல்,  |   Published on : 25th January 2015 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கான சட்டங்கள் குறித்த கருத்தரங்கம், புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகக் கூட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது.

    புத்தகத்தை வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி பேசியது: குழந்தைகள் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கென பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.

    சமூக நலத்துறையின் சார்பில் வெளியிடப்பட்ட இந்த சட்டங்கள் குறித்த புத்தகத்தில் 2006- ஆம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்ட குழந்தைகள் திருமண தடைச்சட்டங்கள் மற்றும் விதிகள், வரதட்சிணை ஒழிப்பு குறித்த சட்டங்கள், வரதட்சிணை கேட்டல் மற்றும் கொடுத்தல் குறித்த தண்டனைகள் 2005-ஆம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்ட குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களைக் காக்கும் சட்டங்கள் மற்றும் விதிகள், பாதுகாப்பு ஆணைகள் குறித்த தகவல்கள், 2007 மற்றும் 2009-ஆம் ஆண்டில் திருத்தி அமைக்கப்பட்ட நலச்சட்டம், தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புக் குறித்த தகவல்கள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன என்றார்.

    கருத்தரங்கில் பங்கேற்ற துறை சார்ந்த அலுவலர்கள், இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள சட்டங்கள் மற்றும் விதிகளைத் தெரிந்து கொண்டு பொதுமக்களிடையே குறிப்பாக குழந்தைத் திருமணம் செய்பவர்கள், பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்களிடம் எடுத்துக்கூறி சட்டப்பாதுகாப்பு அளிக்க முன் வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    மாவட்ட சமூக நல அலுவலர் செரின் பிலிப், கூடுதல் அரசு வழக்குரைஞர் ஆர்.செந்தில்குமார், வழக்குரைஞர்கள் கே.ஜெயராஜ், பன்னீர்செல்வம், ரேகா, பாதுகாப்பு அலுவலர் சு.நாகமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai