சுடச்சுட

    

    முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகப் புகார்: நிதி நிறுவனம் முன் திடீர் போராட்டம்

    By ராசிபுரம்,  |   Published on : 25th January 2015 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதலீட்டாளர்களுக்குத் தர வேண்டிய தொகையைத் தராமல் ராசிபுரத்தில் தனியார் நிதி நிறுவனமொன்று அலுவலகத்தைக் காலி செய்ததால் முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் முன் சனிக்கிழமை இரவு திடீர் போராட்டம் நடத்தினர்.

    ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன் கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் நாள்தோறும் பணம் பெற்று முதிர்வு காலத்தில் அதனை வட்டியுடன் திருப்பிச் செலுத்தும் திட்டத்தை நிதி நிறுவனம் செயல்படுத்தியது. திட்டம் முதிர்வடைந்தும் பலருக்கு இந்நிறுவனம் பணத்தைத் திருப்பித் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இடையில் பணம் கேட்டாலும் செலுத்திய தொகையை இந்நிறுவனம் தரவில்லையாம்.

    இந்தச் சூழ்நிலையில் இந்த நிறுவனம் இடத்தை காலி செய்து பொருள்களை வேனில் எடுத்து செல்வதாக முதலீட்டாளர்களுக்குத் தகவல் வந்தது. தகவல் அறிந்த முதலீட்டாளர்கள் தளவாடங்களை எடுத்துச்சென்ற வேனை முற்றுகையிட்டு சனிக்கிழமை தடுத்தனர். தளவாடங்கள் ஏற்றப்பட்ட வேனைக் கைப்பற்றிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி முதலீட்டாளர்களை சமதானப்படுத்தினர். மேற்கொண்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai