சுடச்சுட

    

    லாரி ஓட்டுநர்களின் குழந்தைகளுக்கு ரூ.13 லட்சம் கல்வி உதவித் தொகை

    By நாமக்கல்,  |   Published on : 25th January 2015 03:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் லாரி ஓட்டுநர்களின் குழந்தைகளுக்கு ஸ்ரீராம் குழும நிறுவனங்களின் சார்பில், ரூ.13 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

    நாமக்கலில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கே.நல்லதம்பி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைக்கான காசோலையை வழங்கினார்.

    8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் லாரி ஓட்டுநர்களின் குழந்தைகள் 389 பேருக்கு ரூ.13 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

    மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முகநாதன், தென்மண்டல சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நடராஜன், நாமக்கல் வட்ட லாரி உரிமையாளர்கள் சங்கச் செயலர் சுப்பிரமணி, பொருளர் சீரங்கன், ஸ்ரீராம் குழும நிறுவனங்களின் அதிகாரிகள் வெங்கடேசன், ஜவஹர், சுதாகர், செல்வக்குமார், ராஜ்குமார், கோபால், சரவணன், ரமேஷ், ஸ்டான்லி, ரஜினி ஆகியோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai