சுடச்சுட

  

  வங்கிகளில் கண்காணிப்புக் கேமரா பொருத்த அறிவுறுத்தல்

  By ராசிபுரம்  |   Published on : 25th January 2015 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராசிபுரம் பகுதியில் உள்ள வங்கிகள், நகைக் கடைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில், கண்காணிப்புக் கேமரா பொருத்திடவும், இரவுக் காவலர்கள் நியமிக்கவும் காவல்துறையினர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

  ராசிபுரம் காவல் நிலையத்திற்கு உள்பட்ட வங்கி மேலாளர்கள், நகைக்கடை உரிமையாளர்கள், வாடகைக் கார் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் பாதுகாப்பு சம்பந்தமாக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் டி.எஸ்.பி. வி.ராஜு தலைமையில் சனிக்கிழமை நடந்தது.

  வாடகைக் கார்களை கடத்துதல், நகைக் கடைகள், வங்கிகளில் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்தல் போன்றவற்றைத் தடுக்க இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

  ராசிபுரம் காவல் ஆய்வாளர் சி.ராஜாரணவீரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அனைத்து வங்கிகள் மற்றும் நகைக்கடைகளில் சி.சி.டி.வி. கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும். மேலும், அதில் செக்யூரிட்டி அலாரம் பொருத்தியிருக்க வேண்டும். நகைக் கடைகள் மற்றும் வங்கிகளில் பணிபுரிபவர்கள் விழிப்புடனும், முன்பின் தெரியாத நபர்கள் வந்தால் தீர விசாரிக்கவும் வேண்டும். சந்தேகம் இருந்தால் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். வாடகைக்கு கார் சென்றால் இன் அண்ட் அவுட் பதிவேடு பராமரிக்க வேண்டும்.

  புதிய நபர்கள் வாகனத்தை வாடகைக்கு எடுத்துச் செல்லும்போது நன்றாக விசாரித்த பின் செல்ல வேண்டும். அவருடைய முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை குறித்துக் கொள்ள வேண்டும்.

  வாடகைக்கு வருபவர்கள் செல்லிடப்பேசி எண், முழு விலாசம், அடையாள அட்டை, வாக்காளர் அட்டை போன்றவற்றை வாங்கிக்கொண்டு பதிவேடுகளில் பதிவு செய்து விட்டு வாடகைக்குச் செல்ல வேண்டும் என விளக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai