Enable Javscript for better performance
வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ராசிபுரத்தில் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்ற வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது

    ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் தொடங்கிய பேரணியை நாமக்கல் கோட்டாட்சியர் கா.காளிமுத்து கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். பேரணியில் வாக்காளர்கள் பெயர் பதிவு செய்வது, வாக்களிப்பதன் அவசியம் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி மாணவ, மாணவியர் சென்றனர்.

    ராசிபுரம் வட்டாட்சியர் கோ.ராஜா, துணை வட்டாட்சியர்கள் ஷாகுல்அமீது, அருள்பிரகாசம், நகராட்சி ஆணையர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பேரணியில் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai