Enable Javscript for better performance
15 ஆயிரம் மூட்டை\\\"அம்மா\\\' சிமென்ட் விற்பனை- Dinamani

சுடச்சுட

    

    "அம்மா' சிமென்ட் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 15,490 மூட்டை சிமென்ட் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

    "அம்மா' சிமென்ட் திட்டத்தின் மூலம் ரூ.190 க்கு ஒரு மூட்டை சிமென்ட் விற்கப்படுகின்றது. புதிய வீடு கட்டுபவர்கள் 100 சதுர அடிக்கு 50 சிமென்ட் மூட்டை வீதம் அதிகபட்சமாக 1,500 சதுர அடி வரை கட்டப்படும் வீட்டிற்கு அதிகபட்சமாக 750 மூட்டை வரை சிமென்ட் பெற்றுக் கொள்ளலாம். வீடு பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணிக்கு குறைந்தபட்சமாக 10 சிமென்ட் மூட்டை முதல் அதிகபட்சமாக 100 சிமென்ட் மூட்டை வரை பெற்றுக் கொள்ளலாம்.

    "அம்மா' சிமென்ட் விற்பனை மையங்களில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி கூறியது:

    நாமக்கல் மாவட்டத்தில் விற்பனை தொடங்கப்பட்டு 12 நாள்களிலேயே 774.50 மெட்ரிக் டன் (15,490 மூட்டை) சிமென்ட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 245 பேர் பயனடைந்துள்ளனர்.

    இதுவரை 1273.950 மெட்ரிக் டன் (25,479 மூட்டை) சிமென்ட் கொள்முதல் செய்யப்பட்டு, 774.500 மெட்ரிக் டன் (15,490 மூட்டை) விற்பனை செய்யப்பட்டது போக 499.450 மெட்ரிக் டன் (9,989 மூட்டை) இருப்பு உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் எலச்சிப்பாளையம், எருமப்பட்டி, கபிலர்மலை, கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, மோகனூர், மல்லசமுத்திரம், பள்ளிபாளையம், புதுச்சத்திரம், சேந்தமங்கலம் மற்றும் வெண்ணந்தூர் ஆகிய 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள சிமென்ட் கிடங்குகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நாமக்கல், ராசிபுரம், பரமத்தி மற்றும் திருச்செங்கோடு முதல் மற்றும் இரண்டாவது சிமென்ட் கிடங்குகள் ஆகிய 5 இடங்களிலும் என மொத்தம் 16 கிடங்குகளில் சிமென்ட் விற்பனை செய்யப்பட்டுவருகிறது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai