சுடச்சுட

  

  நாமக்கல் மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் வரும் 29-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் நலன் கருதி அனைத்து எண்ணெய் எரிவாயு நிறுவன முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள், எரிவாயு வாடிக்கையாளர்கள் பங்கேற்கும் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வரும் 29-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

  எனவே, எரிவாயு விநியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றுத் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai