சுடச்சுட

    

    திறனறித் தேர்வு: சேந்தமங்கலம் பள்ளி சிறப்பிடம்

    By நாமக்கல்  |   Published on : 26th January 2015 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொது அறிவு, ஆங்கிலத் திறனறித் தேர்வில் சேந்தமங்கலம் வேதலோக வித்யாலயா பள்ளி மாணவர்கள் சிறப்பிடத்தைப் பெற்றனர்.

    சென்னையில் உள்ள ஷேக்ஸ்பியர் நிறுவனம் பல ஆண்டுகளாக மாநில அளவில் பொது அறிவுத் திறனறித் தேர்வு, ஆங்கிலத் திறனறித் தேர்வுகளை நடத்தி வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான பள்ளிகள் இந்தத் தேர்வுகளில் கலந்து கொள்கின்றன.

    பொது அறிவுத்திறனறித் தேர்வில் சேந்தமங்கலம் வேதலோக வித்யாலயா பள்ளி மாணவி எஸ்.தர்ஷினி மாநில அளவில் முதலிடம் பெற்று, தங்கப் பதக்கத்தைப் பெற்றார். இ.பூஜா இரண்டாமிடம் பெற்றார். மேலும், மாவட்ட அளவில் எ.சி.மகதி, டி.ஆர்.கிருத்திகா, கே.எஸ்.செல்வக்குமரன் ஆகியோர் முதலிடமும், எம்.சுவேதா, ஆர்.தர்ஷினி ஆகியோர் இரண்டாமிடமும் பெற்றனர்.

    ஆங்கிலத் திறனறித் தேர்வில் எஸ்.பிரனிதா மாநிலத்தில் முதலிடமும், பி.ரித்திகாஸ்ரீ மூன்றாமிடமும் பெற்றனர். கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 11 ஆண்டுகளாக மாநிலத்தில் முதலிடத்தைப் பெற்று சிறப்பிடத்தை இந்தப் பள்ளி மாணவர்கள் பெற்று வருகின்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் எம்.கே.குரு, தலைவர் சுதாகுரு ஆகியோர் பாராட்டினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai