சுடச்சுட

  

  நல்ல மனிதனாக வாழும்போது வாழ்க்கையில் வெற்றி இலக்கை எளிதில் அடைந்துவிடலாம் என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்தார்.

  நாமக்கல் செல்வம் கலை, அறிவியல் கல்லூரியில் 11-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

  விழாவுக்கு கல்லூரித் தாளாளர், தலைவர் பொ.செல்வராஜ் தலைமை வகித்தார். செயலர் கவித்திரா நந்தினி, இயக்குநர் கே.எஸ்.அருள்சாமி, முதல்வர் என்.ராஜாவேல், பேராசிரியர்கள் கோ.ராஜராஜன், நல்லுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் மொத்தம் 850 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில் 21 மாணவர்கள் பல்கலைக் கழக அளவில் சிறப்பிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றனர்.

  மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் சி.சுவாமிநாதன் பேசியது:

  இந்தப் பட்டம் பெரும் நிகழ்வு வரை, மாணவர்களாகிய நீங்கள் தங்களை மகிழ்வாகவே வைத்துக்கொண்டு இருக்கும் வாய்ப்பைப் பெற்றவர்களாக இருந்தீர்கள்.

  இதுவரை உங்கள் பெற்றோர்களும், பள்ளி, கல்லூரி ஆசிரியர்களும் உங்களுக்கான பொறுப்புகளை எடுத்துக் கொண்டு உங்களை கவனித்து வந்தனர். உங்களுக்கான முடிவுகளையும் அவர்கள் எடுத்து வந்தனர். இனி உங்கள் நலன் சார்ந்த முடிவுகளை நீங்களே சுயமாக எடுக்கும் நிலைக்கு வந்துள்ளீர்கள்.

  வாழ்க்கைக்கு பொருளாதார வெற்றியை விட, நல்ல மனிதனாக வாழும் நிலையை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் வெற்றியடைய உதவும். வெற்றி நம்மைத் தேடி வராது, நாம் தான் வெற்றியைத் தேடி நம்மை நகர்த்திச் செல்ல வேண்டும்.

  நமக்கு எது வந்தாலும் அதைப் பொருள்படுத்தாமல் லட்சியத்தை நோக்கி பயணித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai