சுடச்சுட

  

  "நாமக்கல் மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள் அதிகம்'

  By நாமக்கல்,  |   Published on : 26th January 2015 03:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

  தேசிய வாக்காளர் தின விழா, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் வே.ரா.சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார்.

  மாவட்ட ஆட்சியர் தலைமையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், வாக்காளர் உறுதி மொழி ஏற்றனர். தொடர்ந்து, புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளையும், மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற பல்வேறு விழிப்புணர்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழைகளையும் ஆட்சியர் வழங்கினார்.

  இதில் ஆட்சியர் பேசியது: நாமக்கல் மாவட்டத்தில், 18 வயதிலிருந்து 20 வயதிற்கு உள்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் அதிக அளவில் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர். ஆனால், 20லிருந்து 25 வயதுக்கு உள்பட்டவர்கள் மிகக்குறைவாகவே வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ளனர். வேலை, மேல்படிப்பிற்கு வெளியூர்களுக்கு செல்வதால், பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியவில்லை.

  இதைப்போக்கும் வகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் சரியான முகவரிச் சான்றுகளை மின்னஞ்சல் மூலம் பதிவு செய்து வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்கலாம். நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியதன் பயனாக 17,369 ஆண் வாக்காளர்கள், 18,253 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 35,722 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் வாக்காளர் எண்ணிக்கை 2 சதம்

  அதிகரித்துள்ளது.

  நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை 6,53,502 ஆண், 6,70,189 பெண் வாக்காளர்கள், இதர பிரிவு 61 வாக்காளர்கள் என மொத்தம் 13,23,752 வாக்காளர்கள் உள்ளனர். இதன் சராசரி விகிதப்படி ஆண் வாக்காளர்கள் 71 சதமும், பெண் வாக்காளர்கள் 74 சதமும் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவை 100 சதம் நிறைவு செய்யும் வகையில், எளிதான பதிவு முறை, திருத்த முறைகளை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தி வருகிறது.

  பொதுமக்கள் குறிப்பாக மாணவர்கள் தங்களுடைய பெயர்களை படிவம்-6-இல் விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் சேர்த்து வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

  இதில், நாமக்கல் வருவாய்க் கோட்டாட்சியர் கே.காளிமுத்து, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சுகுமார், செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai