சுடச்சுட

    

    நூதன நகை திருட்டு:கேரளத்தைச் சேர்ந்தவர் கைது

    By நாமக்கல்,  |   Published on : 26th January 2015 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல்லில் நூதன முறையில் இளைஞரிடம் நகையைத் திருடியதாக கேரளத்தைச் சேர்ந்தவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

    நாமக்கல் பேருந்து நிலையத்தில் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த பழனியப்பன் (33) பேருந்திற்காக சனிக்கிழமை காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த ஒருவர் பழனியப்பனிடம் மோதிரத்தைக் கழற்றித் தாருங்கள் பொட்டலமாகக் கட்டி தருகிறேன் எனக் கூறி வாங்கியுள்ளார். தொடர்ந்து, அங்குள்ள டீக்கடைக்கு அழைத்து சென்ற அவர், தன்னிடம் இருந்த பொட்டலத்தை கொடுத்து விட்டு அங்கிருந்து செல்ல முயன்றார். பொட்டலத்தில் மோதிரத்துக்கு பதில் கல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதிர்ச்சியடைந்த பழனியப்பன், அவரைப் பிடித்து பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர், கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (49) என்பதும், இதேபோல பெண்களை ஏமாற்றி நூதன முறையில் நகைகளைத் திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து மோதிரத்தை மீட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai