சுடச்சுட

  

  நேரடி விற்பனையால் அதிகரித்து வரும் தடை செய்யப்பட்ட புகையிலை பயன்பாடு

  By நாமக்கல்  |   Published on : 26th January 2015 03:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்டத்தில் கடைகளில் நேரடி விற்பனை பரவலாகத் தொடங்கியதால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

  தமிழகத்தில் புகையிலை பழக்கத்தால் ஆண், பெண் தொழிலாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பெரும்பாலானோர் புற்றுநோயால் அவதியுற்று வருகின்றனர்.

  இதையடுத்து, தமிழக அரசு கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதம் நேரிடையாக உள்கொள்ளும் புகையிலை, அதைச் சார்ந்த பொருள்கள் விற்பனைக்கு தடை விதித்தது. தொடக்கத்தில் இதுகுறித்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது. இதனால், புகையிலை இல்லாத ஒருவித வாசனை பாக்கு அதே வண்ணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. பல மாதங்கள் விற்பனை நேரடியாக இல்லாமல் இருந்தது.

  இந்த நிலையில், தற்போது கடந்த சில வாரங்களாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கிராமங்களில் நேரடியாகக் கடைகளில் தொங்கவிடப்பட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் நேரடியாக கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. காலை 10 மணிக்குள் அனைத்து கடைகளுக்கும் புகையிலைப் பொருள்கள் விநியோகம் முடிந்து விடுகிறது. புகையிலைப் பொருள்களை கடைகள்தோறும் விநியோகப்பதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  கல்லூரி மாணவர்கள், ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரிடமும் புகையிலைப் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது.

  நாமக்கல் மாவட்டத்தில் புகையிலை பொருள்கள் விற்பனையை தடைசெய்ய உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai