சுடச்சுட

  

  ராசிபுரம் அருகே, ஆர்.புதுப்பாளையம் திம்மராய பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை (ஜன.26) நடைபெறுவதை முன்னிட்டு, திரளான பெண்கள் பங்கேற்ற முளைப்பாரி ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  இதில், கோபுர கலசங்களுக்கான புனித நீர் யானை மீது கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து, திரளான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். தொடர்ந்து, விஷ்வக்சேனர் பூஜையும், யஜமானர் சங்கல்பம், புன்யாகவாசனம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், ரக்ஷôபந்தனம், முதல்யாக கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடைபெற்றது. திங்கள்கிழமை காலை 9 மணி அளவில் கும்பாபிஷேகமும், தொடர்ந்து, மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற உள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai