சுடச்சுட

    

    மர்மக் காய்ச்சலால் மக்கள் கடும் அவதி:சிறப்பு சிகிச்சைக்கு வலியுறுத்தல்

    By நாமக்கல்,  |   Published on : 26th January 2015 03:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டத்தில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் இருந்து மீண்டு வர 15 நாள்கள் ஆகிறது. இதனால், காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் சிறப்பு சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாமக்கல் அரசு மருத்துவமனையில் தினமும் சுமார் 1,000 பேர் சிகிச்சைக்காக வருகின்றனர்.

    இவர்களில் 40 முதல் 50 பேர் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வைரஸ் காய்ச்சல் பாதிப்பு பெரும் அளவில் இருந்த போதிலும், சிலருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறியும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்யப்படுகிறது.

    இங்கு மட்டுமின்றி மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இருந்தும் நோயாளிகளின் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த ஆய்வில் தினமும் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாகக் கண்டுபிடிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் பலர் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

    இதுகுறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறியது:

    கடந்த 2 மாதங்களுக்கு முன் ஒரு வாரத்திற்கு ஒருவர் அல்லது 2 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பது உறுதி செய்யப்படும். ஆனால், தற்போது தினமும் ஒருவருக்கு நோய் பாதிப்பு தெரிய வருகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் பலர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றனர்.

    டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai