Enable Javscript for better performance
மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுக நினைவு அஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுக நினைவு அஞ்சலி

    By நாமக்கல்,  |   Published on : 26th January 2015 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல்லில் மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெளன ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை, மாவட்டச் செயலரும், தொழில் துறை அமைச்சருமான பி.தங்கமணி தலைமை வகித்து தொடக்கிவைத்தார்.

    மோகனூர் சாலை, பி.எஸ்.என்.எல். அலுவலகம், அரசு மருத்துவமனை, வட்டாட்சியர் அலுவலகம், அண்ணா சிலை, பரமத்தி சாலை, நகராட்சி அலுவலகம் வழியாக ஊர்வலம் மணிக்கூண்டு சென்றடைந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் உருவப் படங்களுக்கு அமைச்சர் பி.தங்கமணி மாலை அணிவித்தார்.

    இதில், நாமக்கல் மாவட்ட அவைத் தலைவரும் எம்.பி.யுமான பி.ஆர்.சுந்தரம், நாமக்கல் நகரச் செயலரும் எம்.எல்.ஏ.வுமான கே.பி.பி.பாஸ்கர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.காந்திமுருகேசன், நாமக்கல் நகர்மன்றத் தலைவர் ரா.கரிகாலன், துணைத் தலைவர் கே.சேகர், மாவட்ட மாணவர் அணிச் செயலர் டி.விஜயானந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai