சுடச்சுட

    

    குமாரபாளையத்தில் மொழிப்போர் தியாகிகள் 50-ஆம் ஆண்டு நினைநாள் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

    பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, தமிழ்மொழி உரிமை கூட்டு இயக்க நெறியாளர் ரா.நிறைமதி தலைமை வகித்தார். தியாகிகள் த.குப்புசாமி, துரைசாமி, உலகத் தமிழர் பண்பாட்டுக் கழக பொதுச் செயலர் மு.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை மக்கள் இணையச் செயலர் ஸ்டாலின், வாழ்வுரிமை கலைப் பண்பாட்டு இயக்க நிர்வாகி சமர்ப்பா குமரன், திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன், பெரியார் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் கைலாசம், மதிமுக நகரச் செயலர் கே.சிவக்குமார், இலக்கியத் தளம் அமைப்புத் தலைவர் நா.அன்பழகன் உள்ளிட்டோர் பேசினர்.

    குமாரபாளையத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கடந்த 1965-இல் பலர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர். அவர்களின் நினைவாக நினைவுத் தூண் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும், போராட்டத்தில் உயிரிழந்த 12 வயது மாணவர் சந்திரசேகரன் உருவப் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய கம்யூ. நகரச் செயலர் ஈஸ்வரன், தமிழ்மொழி உரிமை கூட்டியக்க மாவட்ட அமைப்பாளர் ஆ.பகலவன், குமாரபாளையம் தமிழ்ச்சங்க பொதுச் செயலர் அரங்க.கணபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai